வேன் கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் காயம்

வேன் கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-23 20:14 GMT
வடமதுரை:
காணப்பாடி அருகே உள்ள சுக்காம்பட்டி பகுதியிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவில் உள்ள தனியார் நூற்பாலைக்கு சென்று கொண்டிருந்தது. வடமதுரை செல்லும் சாலையில் புதுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது திடீரென்று வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்