51 பேரூராட்சிகளில் 1,577 பேர் டெபாசிட் இழந்தனர்
குமரி மாவட்ட பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் 1,577 பேர் டெபாசிட் இழந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் 1,577 பேர் டெபாசிட் இழந்தனர்.
1,577 பேர் டெபாசிட் இழப்பு
குமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் 828 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 3,573 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி 436 இடங்களையும், அ.தி.மு.க. 64 இடங்களையும், பா.ஜனதா 168 இடங்களையும், தே.மு.தி.க. 5 இடங்களையும், சுயேச்சைகள் 155 இடங்களையும் கைப்பற்றின.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெறாத வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 3,573 பேர் போட்டியிட்டதில் 1,577 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அவர்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர். பேரூராட்சி வாரியாக போட்டியிட்டவர்களின் எண்ணிக்கையும், டெபாசிட் இழந்தவர்களின் எண்ணிக்கையும் வருமாறு:-
அகஸ்தீஸ்வரம்-ஆற்றூர்
அகஸ்தீஸ்வரத்தில் போட்டியிட்ட 59 பேரில் 24 பேரும், அஞ்சுகிராமத்தில் போட்டியிட்ட 60 பேரில் 27 பேரும், அருமனையில் போட்டியிட்ட 53 பேரில் 21 பேரும், அழகப்பபுரத்தில் போட்டியிட்ட 80 பேரில் 42 பேரும், அழகியபாண்டியபுரத்தில் போட்டியிட்ட 52 பேரில் 24 பேரும் டெபாசிட் இழந்தனர்.
ஆற்றூரில் போட்டியிட்ட 71 பேரில் 32 பேரும், ஆரல்வாய்மொழியில் போட்டியிட்ட 75 பேரில் 37 பேரும், இடைக்கோடில் போட்டியிட்ட 86 பேரில் 40 பேரும், இரணியலில் போட்டியிட்ட 70 பேரில் 41 பேரும், கடையாலில் போட்டியிட்ட 65 பேரில் 23 பேரும், உண்ணாமலைக்கடையில் போட்டியிட்ட 62 பேரில் 19 பேரும் டெபாசிட் இழந்தனர்.
கணபதிபுரம்-கன்னியாகுமரி
கணபதிபுரத்தில் போட்டியிட்ட 51 பேரில் 18 பேரும், கப்பியறையில் 69 பேரில் 34 பேரும், கருங்கலில் 87 பேரில் 42 பேரும், கல்லுக்கூட்டத்தில் 83 பேரில் 35 பேரும், களியக்காவிளையில் 81 பேரில் 37 பேரும் டெபாசிட் இழந்தனர்.
கன்னியாகுமரியில் போட்டியிட்ட 55 பேரில் 14 பேரும், கிள்ளியூரில் 75 பேரில் 27 பேரும், கீழ்குளத்தில் 61 பேரில் 20 பேரும், குமாரபுரத்தில் 80 பேரில் 40 பேரும், குலசேகரத்தில் 88 பேரில் 39 பேரும், கொட்டாரத்தில் 60 பேரில் 20 பேரும் டெபாசிட் இழந்தனர்.
கோதநல்லூர்- புத்தளம்
கோதநல்லூரில் போட்டியிட்டட 86 பேரில் 44 பேரும், சுசீந்திரத்தில் 65 பேரில் 30 பேரும், தாழக்குடியில் 53 பேரில் 17 பேரும், திங்கள்நகரில் 69 பேரில் 34 பேரும், புதுக்கடையில் 73 பேரில் 36 பேரும் டெபாசிட் இழந்தனர்.
புத்தளத்தில் போட்டியிட்ட 68 பேரில் 33 பேரும், பூதப்பாண்டியில் 72 பேரில் 35 பேரும், பொன்மனையில் 70 பேரில் 25 பேரும், பாலப்பள்ளத்தில் 79 பேரில் 36 பேரும், மணவாளக்குறிச்சியில் 56 பேரில் 25 பேரும் டெபாசிட் இழந்தனர்.
மண்டைக்காடு-திருவட்டார்
மண்டைக்காட்டில் போட்டியிட்ட 55 பேரில் 18 பேரும், மயிலாடியில் 51 பேரில் 15 பேரும், மருங்கூரில் 63 பேரில் 29 பேரும், முளகுமூட்டில் 80 பேரில் 45 பேரும், ரீத்தாபுரத்தில் 92 பேரில் 59 பேரும்,. வாழ்வச்சகோஷ்டத்தில் 79 பேரில் 34 பேரும், டெபாசிட் இழந்தனர்.
திருவட்டாரில் போட்டியிட்ட 75 பேரில் 30 பேரும், திருவிதாங்கோட்டில் 98 பேரில் 52 பேரும், திற்பரப்பில் 78 பேரில் 34 பேரும், தென்தாமரைக்குளத்தில் 62 பேரில் 24 பேரும், தேரூரில் 46 பேரில் 11 பேரும் டெபாசிட் இழந்தனர்.
நல்லூர்- வில்லுக்குறி
நல்லூரில் போட்டியிட்ட 71 பேரில் 30 பேரும், நெய்யூரில் 64 பேரில் 27 பேரும், பளுகலில் 74 பேரில் 26 பேரும், பாகோடில் 100 பேரில் 59 பேரும் டெபாசிட் இழந்தனர்.
வில்லுக்குறியில் 67 பேரில் 30 பேரும், விலவூரில் 72 பேரில் 36 பேரும், வெள்ளிமலையில் 64 பேரில் 24 பேரும், வேர்க்கிளம்பியில் 65 பேரில் 23 பேரும் டெபாசிட் இழந்தனர்.
இவ்வாறு மொத்தம் உள்ள 3,573 வேட்பாளர்களில் 1,577 பேர் டெபாசிட் இழந்தனர்.