வாணியம்பாடி அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல். 3 பேர் கைது

வாணியம்பாடி அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-23 19:39 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்க குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவினர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வாணியம்பாடி, ஆலங்காயம், மிட்டூர், மடவாளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து வரும்போது, காக்கனாம்பாளையம் கிராமத்தில் வாழைத்தோப்பின் அருகே ஆந்திராவுக்கு கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது, கடத்தலில் தொடர்புடைய மாடப்பள்ளியை சார்ந்த ராஜ்குமார் (வயது 28), விக்னேஷ், பசுபதி ஆகிய 3 பேர்களை கைது செய்து தீவிர விவிசாரனை நடத்தி வருகின்றனர், பிடிக்கப்பட்ட அரிசியை வாணியம்பாடியில் உள்ள நுகர்பெருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்