காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் நடைபறும் வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.;
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓச்சேரி, கரிவேடு ஆகிய ஊராட்சிகள் தூய்மை பாரத திட்டத்தில் முன்மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் சிமெண்டு ரோடு, பேவர் பிளாக் சாலை, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், தனிநபர் உறிஞ்சி குழி மற்றும் நாற்றங்கால் பண்ணை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து கிடப்பில் உள்ள வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஊராட்சிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான கழிப்பறை, கழிவுநீர் கால்வாய், நூலகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசித்து செயலாக்கத் திட்டத்தை உடனே சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கரிவேடு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணைைய ஆய்வு செய்து பண்ணையில் வளர்க்கப்படும் செடிகளின் வகை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.