மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வன்னியம்பட்டி விலக்கு அருகே செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது தம்பி மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.