கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-02-23 19:29 GMT
திருச்சி, பிப்.24-
மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலை வழக்கில் மண்ணச்சநல்லூர் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுரேஷ்பாண்டி (வயது 31) மண்ணச்சநல்லூர் சஞ்சய்காந்தி நகரைச் சேர்ந்த கொத்தனார் ராஜா (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரியவந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்