கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறை

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறை

Update: 2022-02-23 19:21 GMT
திருச்சி, பிப்.24-
திருச்சி மாவட்டம் மணப்பாறை வெங்கடேஷ்வரா ரைஸ்மில் அருகே நின்று கள்ளநோட்டுகளை  புழக்கத்தில் விட்டதாக கடந்த 2015-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மோர்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவரை சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார்  கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 396 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் நேற்ற முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை,ரூ.10ஆயிரம்அபராதம்விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனைஅனுபவிக்கஉத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்