வெற்றி வேட்பாளர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு
வெற்றி வேட்பாளர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பேரூராட்சி 15-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் ஜெய்கணேஷ், தி.மு.க சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க வேட்பாளர் ஜெய்கணேஷ் வெற்றி பெற்றார். அவர், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு அவரது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது ராஜேந்திரன் வீட்டு முன்பு வெடி வெடித்து ஆரவாரம் செய்ததாகவும், அதனைத்தட்டிக் கேட்ட ராஜேந்திரன், அவரது மனைவி தயாள்ராணி ஆகியோரை ஜெய்கணேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அரும்பாவூர் போலீசில் தயாள்ராணி புகார் அளித்தார். அதன்பேரில், அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் ஜெய்கணேஷ் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திரனை முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ஆ.ராசா மற்றும் கட்சியினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.