பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 6 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-23 18:08 GMT
பொன்னமராவதி:
புதுக்கோட்டை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மேற்கு மாவட்ட அமைப்பாளர் கார்த்தி தலைமையில், பொன்னமராவதி தெற்கு ஒன்றிய அமைப்பாளர் ஜெயபால், சேகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு பஸ் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் கே.கே.செல்வக்குமாரை வீட்டுக்காவலில் வைத்த தமிழக காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்