வளர்ச்சி பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
திருமருகல் அருகே பில்லாளி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி;
திருமருகல் அருகே பில்லாளி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பில்லாளியிலிருந்து மத்தளங்குடி வரை செல்லும் சாலை சேதமடைந்து கிடைப்பதை பார்வையிட்டார். தொடர்ந்து ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார்.
கொள்முதல் நிலையம்
தொடர்ந்து பில்லாளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அரசு அறிவித்தபடி 40 கிலோ 650 கிராம் எடை சரியாக அளவீடு செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது திருமருகல் ஒன்றிய பொறியாளர் செந்தில், பில்லாளி ஊராட்சி தலைவர் தேவிசகாயராஜ், துணை தலைவர் ஜோதி சவுந்தரராஜன், ஊராட்சி செயலாளர் கமல்ஹாசன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.