அரூர் தீர்த்தமலை பகுதிகளில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

அரூர் தீர்த்தமலை பகுதிகளில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Update: 2022-02-23 16:48 GMT
அரூர்:
அரூர், தீர்த்தமலை பகுதிகளில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கடைகளில் சோதனை
தர்மபுரி மாவட்டம் அரூர், தீர்த்தமலை பகுதிகளில் கடைகள், மளிகை கடைகள், குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், பெட்டிக்கடைகள், பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் அரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்(பொறுப்பு) நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது சில கடைகளில் உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத லோக்கல் குளிர்பான பாக்ெகட்கள், உரிய தயாரிப்பு தேதி இல்லாத நிப்பட், சிப்ஸ் பாக்ெகட்கள், செயற்கை சாயமேற்றிய வறுத்த பட்டாணி ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட தேயிலை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. 
எச்சரிக்கை
இந்த சோதனையின் போது 5 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குடிநீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் நேரடி வெயிலில் வைக்கக்கூடாது. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றே வணிகம் செய்ய வேண்டும். உரிய தேதியில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். மீறினால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்