கணியூர் பஸ் நிறுத்தத்தை தரம் உயர்த்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணியூர் பஸ் நிறுத்தத்தை தரம் உயர்த்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-23 16:38 GMT
மடத்துக்குளம்,   
மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் பஸ் நிறுத்தத்தை தரம் உயர்த்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கணியூர்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவின் முக்கிய ஊராக கணியூர் உள்ளது. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 70 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது.
 இங்கிருந்து பொள்ளாச்சி, திருப்பூர், பழனி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் சென்று திரும்புகின்றன. 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தும் முக்கிய நிறுத்தமாக இது உள்ளது. தினசரி பல ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
இவ்வளவு பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிறுத்தம் தற்போது வரை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக இந்த நிறுத்தத்தின் வளாகம் இருந்தது. அதற்கு பின்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிறுத்தத்தை பஸ் நிலையமாக  தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
துர்நாற்றம்
இதுகுறித்து கணியூர் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பயணிகள்  கூறியதாவது:-
கணியூர் பஸ் நிறுத்த வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல் லை. பொதுக்கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பலரும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து, அதில் புதர்கள் வளர்ந்துள்ளன.
இதில் வசிக்கும் விஷ ஜந்துகள் உலாவருகிறது. இதனால் அச்சமாக உள்ளது. போதிய இருக்கைகள் இல்லாததால், பலரும் திறந்த வெளியிலேயே காத்திருக்கின்றனர். இதற்கு தீர்வாக இந்த பஸ் நிறுத்தத்தை பஸ் நிலையமாக ஆக தரம் உயர்த்த வேண்டும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்