கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
வால்பாறை
குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட ெதாழிலாளி
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கக்கன்காலனியை சேர்ந்தவர் சிவன் முருகன்(வயது 50). அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான சிவன் முருகன், தினமும் வேலை முடிந்து குடிபோதையில் வீட்டுக்கு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் தனது மனைவி முத்துலட்சுமியிடம்(32) தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கோபித்துக்கொண்ட அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
இதன் காரணமாக மனமுடைந்த சிவன் முருகன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சீட்டுக்கு கட்ட வைத்த பணத்தை எடுப்பதற்காக கணவர் வீட்டுக்கு முத்துலட்சுமி வந்தார். அப்போது சிவன் முருகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வால்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.