வாலிபரை கொலை செய்த வழக்கில் அண்ணன்.தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

வாலிபரை கொலை செய்த வழக்கில் அண்ணன்.தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Update: 2022-02-23 15:45 GMT
திருப்பூர்
திருப்பூரில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
திருப்பூரை அடுத்த பொங்கலூர் அம்மன் நகரை சேர்ந்தவர் இனியன் (வயது 27). இவர் கடந்த 19-11-2012 அன்று திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் மிளகாய் பொடி தூவி வாள் மற்றும் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் குளத்துப்புதூரை சேர்ந்த பாலாஜி (37), அவருடைய தம்பி அசோக் (36), நண்பர்களான பொங்கலூரை சேர்ந்த பாலாஜி (38), திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த மதிவாணன் (39), நத்தத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (49), ஆரோக்கியசாமி (37), இந்திரா நகரை சேர்ந்த வேல்முருகன் (41) ஆகிய 7 பேரை கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன் தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பாலாஜி, அசோக், மற்றொரு பாலாஜி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்