ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.;

Update: 2022-02-23 15:05 GMT
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் 2,640 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும். இந்த மதுபானங்களை அழிப்பதற்காக விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி நேற்று மாஜிஸ்திரேட்டு பூர்ணிமா முன்னிலையில் அந்த மதுபாட்டில்களில் இருந்த மதுபானங்கள் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டி, இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்