57 ஆண்டு கால எடப்பாடி நகராட்சியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது

57 ஆண்டுகால எடப்பாடி நகராட்சியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது.

Update: 2022-02-23 04:49 GMT
எடப்பாடி:-
எடப்பாடி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 16 இடங்களில் தி.மு.க.வும், 13 இடங்களில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எடப்பாடி நகராட்சியில் காங்கிரசும், அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று வந்தன. 57 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக எடப்பாடி நகராட்சியை தி.மு.க. தனது வசமாக்கிக்கொண்டது.

மேலும் செய்திகள்