கன்னியாகுமரி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-22 22:20 GMT
கன்னியாகுமரி, 
கன்னியாகுமரி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தை சேர்ந்தவர் சிலுவை பெனோ (வயது 36). மீனவரான இவருடைய மனைவி மரிய கேத்தரின். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
கணவரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக மரிய கேத்தரின் ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சிலுவை பெனோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்