வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2022-02-22 21:54 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீழநெம்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்த விஷ்ணுராஜ் (வயது 21). இவர் அடியாட்களை ஏவி வாலிபர் ஒருவரை தாக்கியது தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்படி விஷ்ணுராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்