தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணவன்-மனைவி வெற்றி

தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணவன்-மனைவி வெற்றி பெற்றனர்.;

Update: 2022-02-22 21:39 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 8-வது வார்டில் தி.மு.க. சார்பில் கருணாநிதியும், 19-வது வார்டில் அவரது மனைவி லாவண்யா கருணாநிதியும் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் கருணாநிதி 485 வாக்குகளும், லாவண்யா கருணாநிதி 422 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். வெற்றி பெற்ற அவர்களுக்கு கட்சியினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்