பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்தவர் ரச்சனா(வயது 39). சினிமா படங்களில் துணை நடிகையாக வலம் வந்த இவர், வானொலி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி’ என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாகவும் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ரச்சனா தனது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். நடிகை ரச்சனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.