டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-வது வார்டில்ெ வன்றது தி.மு.க.வா-சுயேச்சையா?
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-வது வார்டில் சமவாக்குகள் பெற்றதால் ெவன்றது தி.மு.க.வா-சுயேச்சையா? என்ற குழப்பம் நிலவுகிறது.
பேரையூர்,
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி 284 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் பழனிசெல்வி 284 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இருவரும் சரிசமமான முறையில் வாக்குகள் பெற்றனர். இந்தநிலையில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது ரபிக் அறிவித்து அவருக்கு சான்றிதழ் வழங்கினார். ஆனால் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பழனி செல்வி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால் 10-வது வார்டில் யார் ெவற்றி பெற்றார்கள் என குழப்ப நிலை நிலவுகிறது.