அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது களக்காட்டில் சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி

அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது;

Update: 2022-02-22 21:00 GMT
அம்பை:
அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. களக்காடு நகராட்சியில் சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். 
அம்பை நகராட்சி
நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், அம்பை, களக்காடு ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. இதில் விக்கிரமசிங்கபுரம், அம்பை நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. களக்காட்டில் சுயேச்சைகள் அதிகளவில் வெற்றி பெற்று உள்ளனர். 
அம்பை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 14 இடங்களில் வெற்றி பெற்று தனிப்ெபரும்பான்மை பெற்று உள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு - மாரிமுத்து (அ.தி.மு.க.), 2-வது வார்டு - செலின்ராணி (தி.மு.க.), 3-வது வார்டு - சிவசுப்பிரமணியன் (தி.மு.க.), 4-வது வார்டு - அனுசியா (தி.மு.க.), 5-வது வார்டு - அழகம்மை (தி.மு.க.), 6-வது வார்டு - கல்யாணி (தி.மு.க.), 7-வது வார்டு - ராமசாமி (தி.மு.க.), 8-வது வார்டு - சித்ராதேவி (சுயே.), 9-வது வார்டு - கோதர்இஸ்மாயில் (தி.மு.க.), 10-வது வார்டு - தமிழ்செல்வி (சுயே.), 
11-வது வார்டு - பேச்சியம்மாள் (காங்.), 12-வது வார்டு - கே.கே.சி.பிரபாகரபாண்டியன் (தி.மு.க.), 13-வது வார்டு - பேச்சிகனியம்மாள் (தி.மு.க.), 14-வது வார்டு -சவுராபானு (தி.மு.க.), 15-வது வார்டு - சிவக்குமார் (அ.தி.மு.க.), 16-வது வார்டு - முத்துலட்சுமி (ம.தி.மு.க.), 17-வது வார்டு - மாரியம்மாள் (தி.மு.க.), 18-வது வார்டு - லதா (தி.மு.க.), 19-வது வார்டு - ஜோதிகலா (தி.மு.க.), 20-வது வார்டு - வேலுச்சாமி (அ.தி.மு.க.), 21-வது வார்டு - முத்துகிருஷ்ணன் (தி.மு.க.)
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 13 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்று உள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு - இமாக்குலேட் (அ.தி.மு.க.), 2-வது வார்டு - வனிதா (சுயே.), 3-வது வார்டு - வினோதினி (தி.மு.க.) 4-வது வார்டு - செல்வக்குமாரி (தி.மு.க.), 5-வது வார்டு - சுப்புலட்சுமி (சுயே.), 6-வது வார்டு - மீனா குமாரி (தி.மு.க.), 7-வது வார்டு - இசக்கி (சுயே.), 8-வது வார்டு - திலகா (தி.மு.க.), 9-வது வார்டு - இயேசுராஜா (தி.மு.க.), 10-வது வார்டு - அருள்மணி (தி.மு.க.), 11-வது வார்டு - ராமலட்சுமி (தி.மு.க.), 12-வது வார்டு - சுஜாதா (தி.மு.க.), 13-வது வார்டு - சாரதா (தி.மு.க.), 14-வது வார்டு - வைகுண்டலட்சுமி (அ.தி.மு.க.), 15-வது வார்டு - ஜவுகர்ஜான்சா (தி.மு.க.), 16-வது வார்டு - பரமசிவன் (காங்.), 17-வது வார்டு - சுந்தரி (தி.மு.க.), 18-வது வார்டு - குட்டி கணேசன் (தி.மு.க.), 19-வது வார்டு - விக்னேஷ் (சுயே.), 20-வது வார்டு - செல்வசுரேஷ் பெருமாள் (தி.மு.க.), 21-வது வார்டு - சுடலைமாடன் என்ற பாஸ்கர் (அ.தி.மு.க.)
களக்காடு நகராட்சி
களக்காடு நகராட்சியில் ெமாத்தமுள்ள 27 வார்டுகளில் அதிகபட்சமாக சுயேச்சை வேட்பாளர்கள் 11 இடங்களில் வென்று உள்ளனர். தி.மு.க.வுக்கு 10 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 6 இடங்களும் கிடைத்து உள்ளன. வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு - பிரேமா (தி.மு.க.), 2-வது வார்டு சிம்சோன் துரை (சுயே.), 3-வது வார்டு - இஸ்ரவேல் (அ.தி.மு.க.), 4-வது வார்டு - நளினி (சுயே.), 5-வது வார்டு ராமச்சந்திரன் (சுயே.), 6-வது வார்டு - முருகபெருமாள் (அ.தி.மு.க.), 7-வது வார்டு - சோமசுந்தரி (அ.தி.மு.க.), 8-வது வார்டு - பாலசுகன்யா (சுயே.), 9-வது வார்டு - கதிஜா பர்வின் (தி.மு.க.), 10-வது வார்டு - சாந்தி (சுயே.), 11-வது வார்டு - மணிசூரியன் (தி.மு.க.), 12-வது வார்டு - ராஜன் (தி.மு.க.), 13-வது வார்டு - ராஜன் (சுயே.), 14-வது வார்டு - ஜெகநாதன் (தி.மு.க.), 15-வது வார்டு - முருகேசன் (அ.தி.மு.க.), 16-வது வார்டு - பூதத்தான் (தி.மு.க.), 17-வது வார்டு - சங்கரநாராயணன் (சுயே.), 18-வது வார்டு - சங்கரி (தி.மு.க.), 19-வது வார்டு - முகம்மது அலி ஜின்னா (தி.மு.க.), 20-வது வார்டு - சித்ரா (சுயே.), 21-வது வார்டு - அனிதா (தி.மு.க.), 22-வது வார்டு - முத்துலட்சுமி (சுயே.), 23-வது வார்டு - தாமரைசெல்வி (தி.மு.க.), 24-வது வார்டு - மீகா (சுயே.), 25-வது வார்டு - கவுரி (சுயே.), 26-வது வார்டு - இசக்கியம்மாள் (அ.தி.மு.க.), 27-வது வார்டு - ஆயிஷா (அ.தி.மு.க.).

மேலும் செய்திகள்