அடுத்தடுத்த வார்டுகளை கைப்பற்றிய மாமியார்-மருமகள்
விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளை மாமியாரும், மருமகளும் காப்பற்றினர்.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சியில் 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேபி என்பவர் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே 2011-ம் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றவர். இவருடைய மருமகள் சித்தேசுவரி. இவர் தற்போது 26-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மருமகளும், மாமியாரும் அடுத்தடுத்த வார்டுகளை கைப்பற்றினர்.