கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
சிவகாசி,
திருத்தங்கல் திருவள்ளூவர் காலனியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 46). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி- திருத்தங்கல் ரோட்டில் ராதாகிருஷ்ணன் காலனி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பூமிநாதன் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த கவுரிசங்கர், சீனிவாசன், ராகுல், ராமமூர்த்தி, செல்வகணேஷ், விமல்ராஜ் ஆகிய 6 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.