ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-22 20:17 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 892 பேருக்கு பரிசோதனை செய்ததில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 487 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 982 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 771 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்