பத்மநாபபுரம் நகராட்சியில் தலைவர் பதவி பா.ஜனதாவுக்கா? தி.மு.க.வுக்கா?

பத்மநாபபுரம் நகராட்சியில் தலைவர் பதவி பா.ஜனதாவுக்கா? தி.மு.க.வுக்கா? என்பதை சுயேச்சைகள் நிர்ணயிப்பார்கள்.

Update: 2022-02-22 19:58 GMT
தக்கலை, 
பத்மநாபபுரம் நகராட்சியில் தலைவர் பதவி பா.ஜனதாவுக்கா? தி.மு.க.வுக்கா? என்பதை சுயேச்சைகள் நிர்ணயிப்பார்கள்.
பத்மநாபபுரம் நகராட்சி தேர்தல்
பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 8,492 ஆண் வாக்காளர்களும், 8,759 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கைகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 253 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 வார்டுகளில் 111 பேர் போட்டியிட்டனர். 
வாக்குப்பதிவு முடிவில் ஆண் வாக்காளர்கள் 5,684 பேரும், பெண் வாக்காளர்கள் 6,048 பேரும் என மொத்தம் 11, 732 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 68 ஆகும்.
தி.மு.க.-பா.ஜனதா சமபலம்
இந்தநிலையில் வாக்கு எண்ணும் பணி முடிவடைந்த 21 வார்டுகளில் தி.மு.க. 7, பா.ஜனதா 7, சுயேச்சைகள் 6, மதசார்பற்ற ஜனதாதளம் 1 என வெற்றி பெற்றன. இதனால் பத்மநாபபுரம் நகராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தி.மு.க.வும், பா.ஜனதாவும் சமபலத்துடன் இடங்களை கைப்பற்றியதால் பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்றுவதில் அந்த கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அதே சமயத்தில் எந்த நகராட்சி தேர்தலிலும் இல்லாத வகையில் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதிக்கம் பத்மநாபபுரம் நகராட்சியில் உள்ளது. அதாவது 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
கைப்பற்றப்போவது யார்?
பத்மநாபபுரம் நகராட்சியில் பா.ஜனதாவும், தி.மு.க.வும் பெரும்பான்மை பலத்தை பெற வேண்டுமெனில் அது சுயேச்சை வேட்பாளர்களின் கையில் தான் உள்ளது. தலைவர் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்களோ? அந்த கட்சி தான் பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்ற போகிறது.
தமிழ்நாட்டில் வேறு எந்த நகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றவில்லை. இதனால் பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிரமாக செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயத்தில் பா.ஜனதாவுக்கு இந்த நகராட்சியை விட்டு விடக்கூடாது என்பதில் தி.மு.க.வும் வரிந்து கட்டி நிற்கும். எனவே பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது அடுத்தமாதம் 4-ந் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் தெரிய வரும்.
கடந்த முறை பத்மநாபபுரம் நகராட்சி அ.தி.மு.க. வசம் இருந்தது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க. அங்கு ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பத்மநாபபுரம் நகராட்சி தேர்தலில் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. இதில் தி.மு.க. மட்டுமே 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
பத்மநாபபுரம் நகராட்சி தேர்தலில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள், 2-வது இடம் பிடித்தவர்கள் விவரம், பெற்ற வாக்குகள் வருமாறு:-
1-வது வார்டு-ஜெயசுதா 228 வாக்குகள் (தி.மு.க.), ஹம்சத் பீவி (காங்கிரஸ்)-133 வாக்குகள்.
2-வது வார்டு-அருள்சோபன் 422 வாக்குகள் (தி.மு.க.), டானியல் (அ.தி.மு.க..)-168 வாக்குகள்.
3-வது வார்டு-சுலைகா பேகம் 204 வாக்குகள் (தி.மு.க.), நாஸியா (காங்கிரஸ்)-120 வாக்குகள்.
4-வது வார்டு-மும்தாஜ் 205 வாக்குகள்(சுயேச்சை), உவைஸ் (தி.மு.க.)- 199 வாக்குகள்.
5-வது வார்டு-கிருஷ்ணபிரசாத் 271 வாக்குகள் (சுயேச்சை), பெஞ்சமின் பிராங்ளின் (தி.மு.க.) 217 வாக்குகள்.
6-வது வார்டு- நாதிரா பானு 330 வாக்குகள் (ஜனதாதளம்), றயீஷா (தி.மு.க.)-281 வாக்குகள். 
7-வது வார்டு-செந்தில்குமார் 220 வாக்குகள் (சுயேச்சை), பிரதீஷ் (தி.மு.க.) 188 வாக்குகள்.
8-வது வார்டு- நாகராஜன் 314 வாக்குகள் (பா.ஜ.க.), ஹனுகுமார் (காங்கிரஸ்) 176 வாக்குகள்
9-வது வார்டு-வினோத்குமார் 248 வாக்குகள்(சுயேச்சை), ஹரிகுமார் (சுயேச்சை)-172 வாக்குகள்.
10-வது வார்டு- ஷீபா 308 வாக்குகள் (பா.ஜ.க.), அஜிதகுமாரி (சுயேச்சை)- 103 வாக்குகள்.
11-வது வார்டு-பிரியதர்ஷினி 244 வாக்குகள் (பா.ஜ.க.), வசந்தா (தி.மு.க.) 221 வாக்குகள்

மேலும் செய்திகள்