குழித்துறை நகராட்சியில் தலைவர் பதவிக்கு கடும்போட்டி
குழித்துறை நகராட்சியில் தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 5 இடங்களில் வெற்றி பெற்றது.
குழித்துறை,
குழித்துறை நகராட்சியில் தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 5 இடங்களில் வெற்றி பெற்றது.
குழித்துறை நகராட்சி
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 8,767 ஆண் வாக்காளர்களும், 9,608 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 18 ஆயிரத்து 376 வாக்காளர்கள் உள்ளனர். 21 வார்டுகளுக்கு 83 பேர் போட்டியிட்டனர். இந்த நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 5,641 பேரும், பெண் வாக்காளர்கள் 6,163 பேரும் என மொத்தம் 11, 804 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 64.24 ஆகும்.
இங்கு நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதவிர காங்கிரஸ் 4 இடங்கள், பா.ம.க. ஒரு இடத்திலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
தி.மு.க. கூட்டணி கைப்பற்றுமா?
குழித்துறை நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தலைவர் தேர்தலில் 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் குழித்துறை நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். ஆனால் அங்கு தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் மோதல் நிலவியதால் மீண்டும் ஒன்று சேருவார்களா? என்பதில் கேள்விக்குறியாக உள்ளது. எனவே வருகிற 4-ந் தேதி மறைமுக தேர்தலில் தான் குழித்துறை நகராட்சியை எந்த கட்சி கைப்பற்றும் என்ற இறுதி நிலவரம் தெரியவரும்.
கடந்த முறை குழித்துறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி வேட்பாளர்கள்
வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு-மு.பிரபின் ராஜா (காங்கிரஸ்)- 395 வாக்குகள்
2-வது வார்டு-ஜெயந்தி (பா.ஜ.க.)-177 வாக்குகள்
3-வது வார்டு-சாலின் சுஜாதா (தி.மு.க.)-211 வாக்குகள்
4-வது வார்டு-செ.லலிதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-373 வாக்குகள்
5-வது வார்டு-செ. ஆட்லின் கெனில் (காங்கிரஸ்)-261 வாக்குகள்
6-வது வார்டு-விஜூ (பா.ஜ.க.)-328 வாக்குகள்
7-வது வார்டு-விஜயலட்சுமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-165 வாக்குகள்
8-வது வார்டு-கெ.சு. மினி குமாரி (பா.ஜ.க.)-194 வாக்குகள்
9-வது வார்டு-எம்.பி. ரவி (பா.ம.க.)-393 வாக்குகள்
10-வது வார்டு-ஞா.ஜெயின் சாந்தி (சுயேச்சை)-320 வாக்குகள்
11-வது வார்டு-ஜா.க. ரோஸ்லெட் (காங்கிரஸ்)-222 வாக்குகள்
12-வது வார்டு-ஜூலியட் மெர்லின் ரூத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-264 வாக்குகள்
13-வது வார்டு-த.சா. பெர்லின் தீபா (தி.மு.க.)-140 வாக்குகள்
14-வது வார்டு-அ. லில்லி புஷ்பம் (தி.மு.க.)-189 வாக்குகள்
15-வது வார்டு-பா.ரீகன் (காங்கிரஸ்)-123 வாக்குகள்
16-வது வார்டு-கு.ரத்தினமணி (பா.ஜ.க.)-192 வாக்குகள்
17-வது வார்டு-அ.அருள்ராஜ் (தி.மு.க.)-214 வாக்குகள்
18-வது வார்டு-சா.பீ. ஜலீலா ராணி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-282 வாக்குகள்
19-வது வார்டு-பொ. ஆசைத்தம்பி (தி.மு.க.)-272 வாக்குகள்
20-வது வார்டு-சர்தார் ஷா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-419 வாக்குகள்