தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-02-22 19:32 GMT
நாய்கள் தொல்லை
சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்தபத்மனாபபுரம், சண்முகபுரம், ஸ்ரீகுமார்நகர் மற்றும் ஆதித்தபுரம் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                         -மு.தர்மராஜன், அனந்தபத்மனாபபுரம்.
 சுகாதார சீர்கேடு
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட நகரப் பூங்காத் திடல் உள்ளது. இந்த பூங்கா திடல் தற்போது பொது சிறுநீர் கழிப்பிடமாக மாறிவருகிறது. அருகில் கழிப்பிட வசதி இருந்தும்   ஒரு சிலர் சிறுநீர் கழிப்பதற்கு பூங்காத் திடலை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                       -கலையன்பன், ஆரல்வாய்மொழி.

மேலும் செய்திகள்