அதிக வார்டுகளில் வெற்றி வாகை சூடிய சுயேச்சை வேட்பாளர்கள்
திட்டச்சேரி பேரூராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க.வை விட சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடந்தது. இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுயேச்சைகள் 8 வார்டுகளிலும், தி.மு.க கூட்டணி 6 வார்டுகளிலும், அ.தி.மு.க. 1 வார்டிலும் வெற்றி பெற்றது. தி.மு.க., அ.தி.மு..க வை விட அதிக வார்டுகளில் வெற்றி பெற்று சுயேச்சைகள் வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.