தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழித்ேதரோட்ட விழா
தமிழகத்தில் சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மையான தலங்களில் திருவாரூர் தியாகராஜர் கோவில் முதன்மையானது. சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக ஆழித்தேர் சிறப்புக்குரியது. உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழத்தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழித்தேரோட்ட விழா ஆகமவிதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் அடுத்த மாதம்(மார்ச்) 15-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இதையடுத்து 8.10 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனுடன் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடக்கிறது.
தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்
இந்தநிலையில் ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சவுக்கு, பனை சாத்துக்கள் உதவியுடன் தேரின் மேல் பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனுடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. இன்னும் ஆழித்தேரோட்டத்திற்கு 20 நாட்கள் உள்ள நிலையில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.