‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-02-22 18:25 GMT
திண்டுக்கல்: 

தொற்று நோய் அபாயம்
வேடசந்தூர் தாலுகா தேவநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோவில் அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். 
-சந்தனத்துரை, தேவநாயக்கன்பட்டி.

ஆபத்தான படிக்கட்டு பயணம்
திண்டுக்கல்-செங்குறிச்சி இடையே காலை, மாலை நேரத்தில் போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியது ஏற்படுகிறது. எனவே கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-மனோஜ், ஏர்போர்ட்நகர்.

எரியாத தெருவிளக்குகள்
பெரியகுளம் நகராட்சி தென்கரையில் ஒருசில பகுதிகளில் தினமும் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. இரவில் பல பகுதிகள் இருள் சூழ்ந்து விடுவதால், மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகள் தினமும் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-கணேசன், பெரியகுளம்.

சேதம் அடைந்த சாலை 
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தை ஒட்டி தெற்கு பகுதியில் உள்ள இணைப்பு சாலை சேதம்அடைந்து விட்டது. சாலையில் பெரிய பள்ளங்கள் உருவாகி விட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-கலா, திண்டுக்கல்.

மேலும் செய்திகள்