காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, பர்கூர் பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, பர்கூர், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, பர்கூர், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
காவேரிப்பட்டணம் பேரூராட்சி
1-வது வார்டு கீதா ஞானசேகர் (தி.மு.க.) -510, 2-வது வார்டு அம்சவேணி செந்தில்குமார் (தி.மு.க.) -305, 3-வது வார்டு சுஜாதா அண்ணாதுரை (அ.தி.மு.க.) -294, 4-வது வார்டு பரமேஸ்வரி சிவா (அ.தி.மு.க.) -600, 5-வது வார்டு மாலினி மாதையன் (தி.மு.க.) -834, 6-வது வார்டு அபிராமி மதனகோபால் (அ.தி.மு.க.) -361, 7-வது வார்டு நித்யா முத்துகுமார் (தி.மு.க.) -266,
8-வது வார்டு தமிழ்செல்வி சோபன்பாபு (தி.மு.க.) -236, 9-வது வார்டு கோகுல்ராஜ் (தி.மு.க.) -257, 10-வது வார்டு ஜாபர்பாஷா (அ.தி.மு.க.) -487, 11-வது வார்டு திருமால் (அதி.மு.க.) -451, 12-வது வார்டு சாதா துஒணிசா சாபுலால் (தி.மு.க.) -512, 13-வது வார்டு அமுதா சக்திவேல் (தி.மு.க.) -401, 14-வது வார்டு வசந்தி சின்னராசு (தி.மு.க.) -288, 15-வது வார்டு அமுதா பழனி (தி.மு.க.) -173 வாக்குகள் பெற்றனர்.
இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி, தி.மு.க. காவேரிப்பட்டணம் பேரூராட்சியை கைப்பற்றி உள்ளது.
நாகோஜனஅள்ளி பேரூராட்சி
1-வது வார்டு சின்னசாமி (தி.மு.க.) -524, 2-வது வார்டு பழனியம்மாள் சங்கர்(தி.மு.க.) -539, 3-வது வார்டு தம்பிதுரை (தி.மு.க.) -289, 4-வது வார்டு காஞ்சனா ராஜா (தி.மு.க.) -145, 5-வது வார்டு அம்பிகா தங்கதுரை (தி.மு.க) -338, 6-வது வார்டு ரமணி வைரன் (தி.மு.க.) -278, 7-வது வார்டு சுமித்ரா வெங்கடேசன் (அ.தி.மு.க.) -247, 8-வது வார்டு விஜயலட்சுமி ராஜசேகர் (தி.மு.க.) -250, 9-வது வார்டு கடல்வேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) -184
10-வது வார்டு குமார்(தி.மு.க.) -353, 11-வது வார்டு ரமேஷ் (தி.மு.க.) -310, 12-வது வார்டு சுமித்ரா துரைபாபு (தி.மு.க.).-325, 13-வது வார்டு கிருஷ்ணன் (தி.மு.க.) -209, 14-வது வார்டு பிரியதர்ஷினி பிரபு (தி.மு.க.) -206, 15-வது வார்டு மயில்வாகனன் (தி.மு.க.) -120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.-13, அ.தி.மு.க.- 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்று என வெற்றி பெற்று நாகோஜனஅள்ளி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றிஉள்ளது.
பர்கூர் பேரூராட்சி
1-வது வார்டு சூர்யகலா வெங்கட்டப்செட்டி (தி.மு.க.) -367, 2-வது வார்டு அனுராதா மகேந்திரன் (தி.மு.க.) -484, 3-வது வார்டு சின்னசாமி (அ.தி.மு.க.) -386, 4-வது வார்டு சித்ரா சண்முகம் (சுயே) -473, 5-வது வார்டு லட்சுமி மனோகரன் (தி.மு.க.) -539, 6-வது வார்டு மகாலட்சுமி வடிவேலன் (தி.மு.க.) -548, 7-வது வார்டு சந்தோஷ்குமார் (தி.மு.க.) -515, 8-வது வார்டு கார்த்திகேயன் (தி.மு.க.) -550, 9-வது வார்டு ஜான்ஜேசுதாஸ் (தி.மு.க.) -517, 10-வது வார்டு செந்தாமரை பாலன் (தி.மு.க.) -423
11-வது வார்டு கார்த்திகேயன் (சுயே) -468, 12-வது வார்டு சுபாசினி திருப்பதி (அ.தி.மு.க.) -551, 13-வது வார்டு ஆகாஷ் (தி.மு.க.) -402, 14-வது வார்டு ஜீவா துரைசாமி (சுயே) -375, 15-வது வார்டு மருதமணி வடிவேல் (சுயே) -534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதன்படி, மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் தி.மு.க., 2 வார்டுகளில் அ.தி.மு.க., 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால், பர்கூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
தேன்கனிக்கோட்டைபேரூராட்சி
1-வது வார்டு (சுயே) - மவுகமத் ஷெரீப் (சுயே) - 491, 2-வது வார்டு (தி.மு.க.) - நாகலட்சுமி - 484, 3-வது வார்டு (தி.மு.க.) - கிருஷ்ணன் - 644, 4-வது வார்டு (தி.மு.க.) - சுமதி - 499, 5-வது வார்டு (காங்கிரஸ்) - அப்துர் ரகுமான் - 736, 6-வது வார்டு (தி.மு.க.) - ரீஹானா பேகம் - 332, 7-வது வார்டு (தி.மு.க.) - நாஜிமா - 386, 8-வது வார்டு (தி.மு.க.) - முனிராபீ - 446, 9-வது வார்டு (தி.மு.க.) - அப்துல் கபார் -457, 10-வது வார்டு (தி.மு.க.) - மணிவண்ணன் -473, 11-வது வார்டு (தி.மு.க.) - லிங்கோஜூராவ் - 455.
12-வது வார்டு (தி.மு.க.) - பிரேமா - 218, 13-வது வார்டு (பா.ஜனதா) - சஞ்சனா - 283, 14-வது வார்டு (தி.மு.க.) - கவுரம்மா - 635, 15-வது வார்டு (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - ஜெயந்த் - 290, 16-வது வார்டு (தி.மு.க.) - ஸ்ரீதர் - 223, 17-வது வார்டு (அ.தி.மு.க.) - மாது - 749, 18-வது வார்டு (தி.மு.க.) - டி.ஆர். சீனிவாசன் (போட்டியின்றி தேர்வு)
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 13 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரு வார்டில் தி.மு.க. போட்டியின்றி தேர்வாகி உள்ளது. இதை தவிர காங்கிரஸ், பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அ.தி.மு.க. சுயேச்சை ஆகியோர் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.