தர்மபுரி அருகே விவசாயி வீட்டில் சிலிண்டரில் கியாஸ் கசிவு
தர்மபுரி அருகே விவசாயி வீட்டில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள கொளத்தூர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய வீட்டில் கியாஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு, தீ பிடித்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கியாஸ் சிலிண்டரில் பிடித்த தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.