வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-02-22 17:55 GMT
பல்லடம், 
 பல்லடம் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் நித்தின் குமார்( வயது 26). இவர் போட்டோகிராபராக பணிபுரிந்து வந்தார்.  இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை இவரது அறை திறக்கப்படவில்லை. இதையடுத்து இவரது தாயார் வள்ளி அவரை அழைக்க சென்ற போது கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது  நித்தின்குமார்  தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறித் துடித்தார். 
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நித்தின் குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார் இதையடுத்து பின் நித்தின் குமாரின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மேலும் செய்திகள்