22 பேருக்கு கொரோனா

22 பேருக்கு கொரோனா

Update: 2022-02-22 17:48 GMT
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 25-க்கு கீழ் குறைந்து விட்டது. நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறையுடன் இணைந்து மருத்துவ முகாம்கள், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதுபோல் காய்ச்சல் முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்படுகிறது.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 29 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 520 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,052 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்