வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

19 வார்டுகளில் வெற்றி பெற்று வால்பாறை நகராட்சியை தி.மு.க. தக்கவைத்தது.;

Update: 2022-02-22 17:20 GMT
வால்பாறை

19 வார்டுகளில் வெற்றி பெற்று வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

வால்பாறை நகராட்சி 

கோவை மாவட்ம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 58 ஆயிரத்து 708 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 34 ஆயிரத்து 063 பேர் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் 19 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,840) 
செல்வகுமார்(தி.மு.க.)-1,541
நடராஜ்(அ.தி.மு.க.)-1,13
தாமோதரன்(சுயேச்சை)-75
தண்டபாணி(சுயேச்சை)-44
சுனில்(பா.ஜனதா)-35
மோகன்(இ.கம்யூ.)-12
ரவிக்குமார்(காங்கிரஸ்)-11
பிரபாகரன்(நாம் தமிழர்)-7
2-வது வார்டு(பதிவான வாக்குகள்-848)
கனகமணி(தி.மு.க.)-571
உஷாதேவி(பா.ஜனதா)-177
ஜெயஸ்ரீ(அ.தி.மு.க.)-92
துர்காதேவி(நாம் தமிழர்)-8

3-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,881)
வீரமணி(விடுதலை சிறுத்தைகள்-உதயசூரியன் சின்னத்தில் போட்டி)-1,386 
ரமேஷ்குமார்(அ.தி.மு.க.)-316
கார்த்திகேயன்(சுயேச்சை)-70
பிரபு(சுயேச்சை)-62
மணிகண்டன்(பா.ஜனதா)-47
4-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,532)
பாஸ்கர்(சுயேச்்சை)-744
சுரேஷ்(தி.மு.க.)-642
சண்முகம்(அ.தி.மு.க.)-90
ரவிச்சந்திரன்(சுயேச்சை)-39
ராஜகோபால்(காங்கிரஸ்)-9
சண்முகம்(நாம் தமிழர்)-8

5-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,499)
கவிதா (தி.மு.க.)-1,136
கார்த்திக் பிரியா(அ.தி.மு.க.)-355
சுபத்ரா(நாம் தமிழர்)-8
6-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,504)
சத்தியவாணிமுத்து(தி.மு.க.)-1,133
சகுந்தலா(அ.தி.மு.க.)-207
பால்தாய்(சுயேச்சை)-129
உஷா(பா.ஜனதா)-35
7-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,279)
கலாராணி(தி.மு.க.)-1,067
சகிலா(அ.தி.மு.க.)-166
பாத்துமா(சுயேச்சை)-46

8-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,806)
இந்துமதி(தி.மு.க.)-1,480
ஷீலா(அதிமுக)-259
சசிகலா(பா.ஜனதா)-51
செல்வி (நாம் தமிழர்)-16
9-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,520)
மகுடீஸ்வரன்(தி.மு.க.)-989
மயில்கணேசன்(அ.தி.மு.க.)-480
செந்தில்குமார்(காங்கிரஸ்)-27
தமிழரசன்(நாம் தமிழர்)-12
கண்ணன்(பா.ஜனதா)-10
கலைவாணி (சுயேச்்சை)-2

10-வது வார்டு(பதிவான வாக்குகள்-3,300)
காமாட்சி(தி.மு.க.)-2,502
லோகேஸ்வரன்(சுயேச்சை)-504
சுகாசினி(அ.தி.மு.க.)-187
லோகேஸ்வரன்(நாம் தமிழர்)-47
பிரின்ஸ்(மக்கள் நீதி மய்யம்)-23
செல்வகுமார்(சுயேச்்சை)-18
தர்மராஜ் (தே.மு.தி.க.)-8
செல்வின்லாய்(சுயேச்்சை)-8
லதா(சுயேட்சை)-3
11-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,862)
செந்தில்குமார்(தி.மு.க.)-1,366
பாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.)-380
கருப்பசாமி(சுயேச்சை)-49
கோவிந்தராஜ்(நாம் தமிழர்)-35
சூரியா(பா.ஜனதா)-9
12-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,746)
அன்பரசன்(தி.மு.க.)-1,017
ராஜேந்திரன்(சுயேச்சை)-432
சவுந்தரராஜன்(அ.தி.மு.க.)-222
சஞ்சீவிராஜ்(பா.ஜனதா)-67
பரமசிவம்(மா.கம்யூ.)-8

13-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,212)
ராஜேஸ்வரி(தி.மு.க.)-962
மேகலா(அ.தி.மு.க.)-250
14-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,719)
அழகுசுந்தரவள்ளி(தி.மு.க.)-1,613
சுகுணாராணி(அ.தி.மு.க.)-58
கலாராணி(பா.ஜனதா)-35
ஜோதிலட்சுமி(நாம் தமிழர்)-13
15-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,387)
ரவிச்சந்திரன்(தி.மு.க.)-702
செந்தில்முருகன்(சுயேச்சை)-644
சண்முகவேலு(அ.தி.மு.க.)-28
தமிழிசைவேந்தன்(பா.ஜனதா)-7
மணிகண்டன்(காங்கிரஸ்)-6
16-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,341)
கீதாலட்சுமி(தி.மு.க.)-981
பாப்பூ(அ.தி.மு.க.)-292
ராஜலட்சுமி(பா.ஜனதா)-68

17-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,641)
மணிகண்டன்(அ.தி.மு.க.)-800
சிவக்குமார்(தி.மு.க.)-793
கணேசன்(சுயேச்சை)-23
முருகன்(காங்கிரஸ்)-14
கவுதமன்(நாம் தமிழர்)-11
18-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,496)
ஜெயந்தி(தி.மு.க.)-1,119
விஜயராணி(அ.தி.மு.க.)-315
அமிர்தராணி(சுயேச்சை)-34
உமாகுட்டி(பா.ஜனதா)-28
19-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,538)
பால்சாமி(தி.மு.க.)-903
ராஜதுரை(காங்கிரஸ்)-447
பாலன்(அ.தி.மு.க.)-189

20-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,633)
மாரியம்மாள்(தி.மு.க.)-1,028
லட்சுமி(காங்கிரஸ்)-246
கனகவல்லி(பா.ஜனதா)-183
சமுத்திரக்கனி(அ.தி.மு.க.)-176
21-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,506)
உமாமகேஷ்வரி(தி.மு.க.)-1,024
மல்லிகா(அ.தி.மு.க.)-448
ஜீவாலட்சுமி(இ.கம்யூ.)-34.

10 மற்றும் 9-வது வார்டில்
தாய்-மகன் வெற்றி

வால்பாறை நகராட்சி 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காமாட்சி என்பவர் 2 ஆயிரத்து 502 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது மகன் மகுடீஸ்வரன் 9-வது வார்டில் 989 வாக்குகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். தேர்தலில் வெற்றி தாய், மகனை கட்சியினர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர். 

60 வேட்பாளர்கள் ‘டெபாசிட்’ இழப்பு
வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகளில் 95 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 60 வேட்பாளர்கள் தங்களது வைப்பு தொகையை(டெபாசிட்) இழந்தனர். அதில் அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அடங்குவர்.

மேலும் செய்திகள்