வாக்கு எண்ணிக்கை முடிவை தமிழகத்தில் முதலாவதாக அறிவித்தது, வால்பாறை நகராட்சி

வாக்கு எண்ணிக்கை முடிவை தமிழகத்தில் முதலாவதாக அறிவித்தது, வால்பாறை நகராட்சி

Update: 2022-02-22 16:52 GMT
வால்பாறை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் இன்றுகாலை 8 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் பார்வையாளர் ஜமுனாதேவி முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடந்தது. பின்னர் விறு விறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை 10.45 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து 21 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலேயே வால்பாறை நகராட்சி வாக்கு எண்ணிக்கை முடிவுதான் முதலாவதாக வெளியிடப்பட்டது. இதற்கு காரணமான வால்பாறை நகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மேலும் செய்திகள்