ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் மாசித் திருவிழா நம்மாழ்வார் தெப்ப உற்சவம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் மாசித் திருவிழா நம்மாழ்வார் தெப்ப உற்சவம் நடைபெற்றது

Update: 2022-02-22 15:33 GMT
தென்திருப்பேரை:
நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதார் திருக்கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.  கடந்த 20-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. 
பத்தாம் திருவிழாவான நேற்று முன்தினம் சுவாமி உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளினார். 11-ம் திருநாளான நேற்று இரவு நம்மாழ்வார் ஆச்சாரியர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(புதன்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவில் எம்பெருமானார் ஜீயர், திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயர், மைசூர் பரகால ஜீயர், கோவில் நிர்வாக அதிகாரி அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் செய்திருந்தார

மேலும் செய்திகள்