நம்பியூர் அருகே குடிசை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
நம்பியூர் அருகே குடிசை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு
நம்பியூர் அருகே குடிசை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இடம் ஒதுக்கீடு
நம்பியூர் தாலுகா எம்மாம்பூண்டி கிராமம் பாப்பான்குட்டை, புதுக்காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். நம்பியூர் தாசில்தார் 42 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கி கொடுத்து அங்கேயே வசிக்க உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து நிலத்தை சமன் செய்து அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மனை எண் பதிவு செய்தோம்.
குடிசை அமைக்க எதிர்ப்பு
இந்தநிலையில் அங்கு குடிசை அமைக்க சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த சிலர், தங்களது இடம் என்றுக்கூறி குடிசை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. எனவே நிலம் தொடர்பாக விசாரணை நடத்தி குடிசை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களை அதே இடத்தில் வசிக்க அனுமதிப்பதுடன், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், “அந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்பதால், வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது”, என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.