நெல்லை :விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்தார்

Update: 2022-02-21 20:15 GMT
நெல்லை :
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). லாரி டிரைவர். இவர் நேற்று காலை நெல்லை கொக்கிரகுளம் பலாப்பழ ஓடை பகுதியில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்