எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும்
எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பேராசிரியர் இளமுருகன் தலைமை தாங்கினார். விடுதலை வேந்தன் முன்னிலை வகித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தமிழ்மாறன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் மற்றும் குணசேகரன் ஆகியோர் பேசினர்.
பேராசிரியர் கண்ணதாசன், மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டு, தமிழ்ஆட்சி மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் எல்லோருக்கும் கல்வி, எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக தாய்மொழியான தமிழ் மொழிகாக்க உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.