கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
சிவகாசி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி,
திருத்தங்கலை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 39). இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கார்த்திக் சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு பேப்பர் மில்லில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். கார்த்திக்குக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் விடுமுறையன்று மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரிசெல்வி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.