போலீசாரின் அதிரடி சோதனையில் 33 ரவுடிகள் சிக்கினர்
போலீசாரின் அதிரடி சோதனையில் 33 ரவுடிகள் சிக்கினர்;
திருச்சி, பிப்.22-
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த சமயத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். ஒரு சில ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் விடிய, விடிய மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 33 ரவுடிகள் சிக்கினர். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.