அரவக்குறிச்சி பகுதியில் பூத்துகுலுங்கும் முருங்கை மரங்கள்
அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை மரங்கள் பூத்துகுலுங்குகிறது
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். இப்பகுதி சற்று வறட்சியான பகுதியாகும். அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆறு, குடகனாறு, நங்காஞ்சி ஆறு உள்ளது. மேற்கண்ட ஆறுகளில் மழைக்காலத்தில் தண்ணீர் வரும்போது இப்பகுதியில் விவசாயம் செழிக்கும். மற்ற வறட்சியான நேரங்களில் விவசாயிகள் தங்கள் கிணற்றில் உள்ள சிறிதளவே நீரைக்கொண்டு கால்நடைகள் வளர்த்தல் மற்றும் முருங்கை பயிரிட்டு வருகின்றனர். தற்போது முருங்கை பருவம் முடிந்து முருங்கை மரங்களும், செடிகளும் நன்கு வளர்ந்து தற்போது பூ பூத்து குலுங்குகிறது. மார்ச் மாதத்திற்கு மேல் காய்கள் வரத்து அதிகரிக்கும்.