கரூர் மாவட்டத்தில் வார்டுகள் வாரியாக ஓட்டுகள் எண்ணப்படும் சுற்றுகள் குறித்த விவரம்
கரூர் மாவட்டத்தில் வார்டுகள் வாரியாக ஓட்டுகள் எண்ணப்படும் சுற்றுகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகள், புஞ்சை தோட்டக்குறிச்சி, அவரக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் கரூர் மாநகராட்சிக்கு 47 வார்டுகளுக்கு 187 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 12 மேஜைகளில் 16 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது. குளித்தலை நகராட்சிக்கு 24 வார்டுகளுக்கு 24 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 8 மேஜைகளில் 3 சுற்றுகளாகவும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு 27 வார்டுகளுக்கு 35 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 5 மேஜைகளில் 7 சுற்றுகளாகவும், புகழூர் நகராட்சிக்கு 24 வார்டுகளுக்கு 32 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 4 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளது.
95 சுற்றுகள்
இதேபோல் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு 15 வார்டுகளுக்கு 15 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு 14 வார்டுகளுக்கு 15 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், புலியூர் பேரூராட்சிக்கு 14 வார்டுகளுக்கு 14 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 7 சுற்றுகளாகவும், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு 14 வார்டுகளுக்கு 14 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 7 சுற்றுகளாகவும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு 15 வார்டுகளுக்கு 15 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில், 8 சுற்றுகளாகவும், மருதூர் பேரூராட்சிக்கு 15 வார்டுகளுக்கு 15 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், நங்கவரம் பேரூராட்சிக்கு 18 வார்டுகளுக்கு 18 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு 14 வார்டுகளுக்கு 14 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் 2 மேஜைகளில் 7 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. கரூர் மாவட்டத்தில் 241 வார்டுகளுக்கு 398 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் மொத்தம் 45 மேஜைகளில் 95 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது. இவை அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக் கப்படுகிறது.