அரக்கோணத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

அரக்கோணத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-21 18:04 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்தவர் சாதிக் (வயது 35), பெட்டி கடை நடத்தி வந்தார். இவருக்கு  ஷகிலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ஷகிலா குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 வீட்டில் யாரும் இல்லாததால் அதிகமாக மது அருந்திவிட்டு சாதிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவலறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்