ஆரணி அருகே மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் தவறி விழுந்து சாவு
ஆரணி அருகே மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தார்.
ஆரணி
ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 51), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது திடீரென ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தபடி அங்குள்ள சேற்றில் சிக்கிக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக சேற்றில் சிக்கிக் கொண்ட வேலுவை தேடி வந்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.