சந்தன மரம் வெட்டிய வாலிபர் கைது

சந்தன மரம் வெட்டிய வாலிபர் கைது;

Update: 2022-02-21 17:57 GMT
திருச்சி, பிப்.22-
திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா உள்ளது. மாநகராட்சி பொன்மலை கோட்டம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவுக்கு மாலை நேரத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழிப்பார்கள். பூங்காவை சுற்றி டீக்கடைகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.
நேற்று அதிகாலை செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பூங்காவுக்குள் இருந்த மரத்தை வெட்டுவது போன்ற சத்தம் கேட்டது.உடனே அவர் பூங்காக்கு சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார்.அந்த வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பிடித்து கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சூரப்பள்ளத்தை சேர்ந்த அழகேசன் (வயது 35) என்றும், அவர் மீது ஏற்கனவே 2 திருட்டு வழக்குகள்  உள்ளது என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அவரை கைது செய்து, யாருக்காக சந்தன மரத்தை வெட்டினார்?. எங்கு கடத்த திட்டமிட்டிருந்தார்?. என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பூங்காவில் வாலிபர் சந்தன மரம் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்