நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி கணவர் படுகாயம்

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி கணவர் படுகாயம்;

Update: 2022-02-21 17:56 GMT
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 80). இவருடைய மனைவி தங்கம்மாள் (75). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு செல்ல சாலையை கடக்க முயன்றனர். 
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக 2 பேர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம்மாள் இறந்தார். முத்துசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முள்ளுக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் (30) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்