வேலகவுண்டம்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-02-21 17:56 GMT
பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 70). கூலித்தொழிலாளி. இவருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தொடர்ந்து சிகிச்சை‌ பெற்றும் சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த ரங்கசாமி 19-ந் தேதி வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது மகன் வரதன் உடனடியாக தந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரங்கசாமி இறந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்